Thipaan / 2016 ஜூலை 20 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிராந்திய திணைக்களத்தினால், அளவை, நிறுவை உபகரணங்களுக்கு, நேற்றுப் புதன்கிழமை தொடக்கம் நாளை வெள்ளிக்கிழமை வரை, முத்திரை பொறிக்கப்படும் என, திணைக்களத்தின் அதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
தோப்பூர் பொது நூலகத்தில் வைத்தே, அளவை, நிறுவை உபகரணங்களுக்கு முத்திரை பொறித்து கொடுக்கப்படவுள்ளதாகவும் தோப்பூர் பிரதேசத்தில் அளவை நிறுவை உபகரணங்களை பாவிக்கின்ற வியாபாரிகள் தங்களது அளவை உபகரணங்களுக்கு கட்டாயம் சீல் பொறிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு, அளவை பொருட்களுக்கு முத்திரை பொறிக்காத வியாபாரிகள் கண்டுபிடிக்கப்படுவார்களாயின், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 5,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்த நேரிடுமெனவும் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.


31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago