2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2016 ஜூலை 13 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி, பயிலுநர்களால்,இன்று புதன்கிழமை(13) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிண்ணியா புஹாரி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டம் சின்ன கிண்ணியா வீதியினூடாக சென்று மீண்டும் புஹாரி சந்தியை சென்றடைந்தது.

மாவட்ட முகாமையாளர் கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் அவ்விடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி பதாதைகளை ஏந்தியவாறு 60க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .