2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 'வடக்கு, கிழக்கு இணைப்பை த.தே.கூ. கோருகின்றது'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆரம்பப் புள்ளியாக வடக்கு, கிழக்கு  இணைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கோருகின்றது எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் தெரிவித்தார்.

இதனை ஏற்பதற்கு கிழக்கு மாகாணசபையிலுள்ள எந்தக் கட்சி தயாராகவுள்ளது எனவும் அவர்  கேள்வியெழுப்பினார்.

2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணசபையின் வரவு –செலவுத்திட்டத்தை மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் செவ்வாய்க்கிழமை (20) சமர்ப்பித்தார்.

இதன் பின் மாகாண முதலமைச்சின் கீழுள்ள அமைச்சுகளுக்கான வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, '2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.  இலங்கையிலுள்ள 09 மாகாணசபைகளில் கிழக்கு மாகாணசபை வேறுபட்டது' என்றார்.  

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து  ஆட்சி அமைத்தன. அரசியல் ரீதியாக ஒன்றிணையவில்லை' எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X