2021 ஜனவரி 27, புதன்கிழமை

இரண்டு மாடி கட்டடத் திறப்புவிழா

Thipaan   / 2016 ஜூலை 13 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ. பரீட்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்  கட்டி முடிக்கப்பட்ட, புல்மோட்டை தள வைத்தியசாலை நோயாளர் விடுதிக்கான இரண்டு மாடி புதிய கட்டடதின் திறப்பு விழா, எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .