Niroshini / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
பாடசாலை மாணவர்களுக்கான இணைப் பாடவிதான செயற்பாடுகளுக்கான சின்னங்கள், சீருடைகள் என்பவற்றை அரசாங்கம் இலவசமாக வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை சாரணர் சங்கத்தின் 14ஆவது ஒன்று கூடல் பாசறையானது திருமலை சர்வோதய வளாகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாடசாலை மட்டத்தில் உள்ள சாரணர்,சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ்,பேன்ட் குழுவினர் மற்றும் விளையாட்டு குழுக்கள் முதலியவற்றுக்கான சீருடைகள் மற்றும் சின்னங்கள் இலவசமாக வழங்கப்படாத காரணத்தால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறான இணைப் பாடவிதான செயற்பாடுகளில் செயற்பட முடியாமல் அவர்களுடைய திறன்கள் பயன்படுத்த முடியாமல் போகின்றது.
எனவே, இவ்வாறான இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது அம் மாணவர்களும் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.
மேலும், மாணவர்கள் இவ்வாறான இணை பாடவிதானங்களில் ஈடுபடுவதனால் தமது ஆளுமை, திறமை மற்றும் தொடர்புகள் என்பன விருத்தியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
11 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago