Thipaan / 2016 ஜூலை 10 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்,பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, மனையாவெளி பகுதியில், இளம் பெண்ணொருவரைக் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபரொருவரின் சடலத்தை சந்தனவெட்டை காட்டுப்பகுதியிலிருந்து, நேற்று சனிக்கிழமை (09) மீட்டுள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லிகைதீவு-பெரியவெளி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சுரேந்திரன் சிவஜோதம் (28 வயது) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவரின் சடலத்துக்கருகில் நஞ்சுப் போத்தலொன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் கணபதிப்பிள்ளை அஜந்தினியை (23 வயது) தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்தநபர் தேடப்பட்டு வந்தார்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
55 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago