2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 06 பேர் மயக்கம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், வி.சுகிர்தகுமார்,எஸ்.சசிக்குமார்  

கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக மூன்றம்சக் கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள  அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகளில் 06 பேர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, திருகோணமலை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் பி.தட்சாயன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (02) 04 பேரும் சனிக்கிழமை (03) 02 பேரும் மயக்கமடைந்ததாகவும் அவர் கூறினார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பட்டதாரிகள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X