2021 மே 06, வியாழக்கிழமை

உர மூடைகளைத் திருடியவர் கைது

Thipaan   / 2016 ஜூலை 24 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் பத்து உர மூடைகளைத் திருடிய நபரொருவரை, நேற்று சனிக்கிழமை(23) மாலை கைது செய்துள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், வாத்தியாக பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேகநபர் வென்சாரன்புர பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் பத்து உர மூடைகளைத் திருடி விற்பனை செய்துள்ளார்.

இது தொடர்பில், விவசாயியால், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே அச்சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதானத் தெரிவித்த பொலிஸார், அவரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .