2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கசிப்பு வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 மார்ச் 08 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

சட்ட விரோதமான முறையில் ஒரு லீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றஞ்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான நபருக்கு, ஏழாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த நபரை, கிண்ணியாப் பொலிஸார் கைதுசெய்து இன்று செவ்வாய்க்கிழமை (08) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் ஹயான் மீஹககே மேற்கண்டவாறு அபராதம் விதித்தார். 

சந்தேகநபர், கிண்ணியாவில் இருந்து திருகோணமலைக்கு கசிப்பைக் கொண்டு செல்லும் போது கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--