2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்குப் பொலிஸ் பிணை

Princiya Dixci   / 2016 மார்ச் 13 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாயில் கஞ்சாவை வைத்திருந்த நபரொருவரை, கந்தளாய் பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை (13) பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை (14) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாகும் அறிவித்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 

கந்தளாய், ரஜஎலப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று சனிக்கிழமை (12) இரவு துவிச்சக்கவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த நபரைப், நிறுத்தி பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது 250 மில்லிகிராம் கஞ்சாவை அவர் வைத்திருந்தமை தெரியவந்ததாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபருக்கெதிராக கஞ்சா வழக்கென்றும் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .