2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த இளைஞனுக்கு பிணை

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் 2.1 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு,  எதிர்வரும் 26ஆம் திகதி  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இன்று  திங்கட்கிழமை (23)  உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா, 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞனுக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், இவர் சீனக்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இவரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து குறித்தளவு கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .