2021 ஜனவரி 20, புதன்கிழமை

‘கோட்டாவின் தோல்வி உறுதியாகியுள்ளது’

எப். முபாரக்   / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ தோல்வியடைவது உறுதியாகியுள்ளது” என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, கந்தளாயில் நேற்று முன்தினம் (10)  இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து தீவிரவாத அராஜகங்களையும் மேற்கொண்டவர் இந்த ஜனாதிபதி வேற்பாளர் கோட்டா தான்.

“இப்படிப்பட்டவருக்கு நாம் வாக்களிக்க கூடாது. முஸ்லிம் மக்களின் பொருளாதாரம், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து உடைக்க கட்டளையிட்டவர் தான் கோட்டா.

“ கோட்டாவுக்கு அளிக்கின்ற வாக்குகள், மீண்டுமொரு யுத்தத்துக்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கும். எனவே, சிந்தித்து எதிர்கால ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவை உருவாக்குவோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .