அப்துல்சலாம் யாசீம் / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோட்டாபாய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதனுடாக, கிராமப்புறங்களில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் ஜகத் வேரகொட எற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு, மஹாதிவுல்வெவ கிராமத்தில் நேற்று (11) நடைபெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் மேலும் நாமல் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் மஹிந்த அரசாங்கத்திலேயே பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
இதனைவிடவும் எதிர்காலத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறும், இதனூடாக கிராமப்புறங்களில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கபில, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரியவதி கலப்பத்தி, கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .