2021 ஜனவரி 27, புதன்கிழமை

கட்டுரை போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

சுக வாழ்க்கை பேரவையின் ஏற்பாட்டில் தரம்  6-13 வரையான மாணவர்களுக்கிடையில் கட்டுரைப்போட்டியொன்று நடத்தப்படவுள்ளது.

இப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தரம் 6-8, 9-11, 12-13 என மூன்று பிரிவுகளாக நடத்தப்படவுள்ள இப்போட்டியில் பங்குபற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆரம்பப் பிரிவு மாணவர் 'உடல் பருமனைத் தவிர்ப்போம்' என்ற தலைப்பில் 200 சொற்களுக்கு குறையாமலும் மத்திய பிரிவு மாணவர்கள் 'உழைப்பின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் 300 சொற்களுக்கு குறையாமலும் சிரேஷ்டப பிரிவு மாணவர்கள் 'உடல் உழைப்பில்லா வாழ்க்கை முறையும் அதன் பாதிப்புக்களும்' என்ற தலைப்பில் 500 சொற்களுக்குள்ளும்

கட்டுரைகளை எழுத வேண்டுமென கோரப்பட்டுள்ளனர். கட்டுரையை ஏ4 அளவுத் தாளில் எழுதி பாடசாலை அதிபரின் சிபாரிசுடன் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பதாக,  இணைப்பாளர், சுக வாழ்க்கைப் பேரவை, இல.7, அல்பேட் பிளேஸ், தெஹிவல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .