2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கால்நடைகளுக்கு நோய்; பால் உற்பத்தி வீழ்ச்சி

எப். முபாரக்   / 2020 மார்ச் 09 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள குர நோய் காரணமாக, பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக, கால்நடை வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பசு, எருமை மாடுகளுக்கே, இவ்வாறு குர நோய் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, மிருக வைத்தியர்கள் உரிய சிகிச்சைகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நோய், மாவட்டத்தின் ஏனைய இடங்களிலுள்ள கால்நடைகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக வெருகல், கெங்கைப் பகுதிகள், சேருநுவர போன்ற பகுதிகளுக்கு கால்நடைகளைக் கொண்டு செல்வதை நிறுத்தும் படி, உரிய பிரதேச செயலகங்களுக்குத் தகவல்களை வழங்க, மாவட்டக் கால்நடைப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X