2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றம்

Yuganthini   / 2017 மே 21 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சர்ச்சைக்குரிய மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், மூதூரில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்திருந்ததன்படி, இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக, கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.

மேற்படி கல்விப் பணிப்பாளரை இடமாற்றக்கோரி, கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியன்று, மூதூர் மற்றும் திருகோணமலை நகரப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது, மூதூருக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படுவார் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய, கடந்த 6, 8ஆம் திகதிகளில் இடம்பெற்ற விசாரணைக் குழுவினது அறிக்கையின் பிரகாரம், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.கே.எம்.மன்சூர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூதூர் வலயக் கல்வி அலுவலக ஆவணங்களை, மூதூர் வலய நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்.ஜெயராஜா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .