2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

கோமரங்கடவெல பிரதேச செயலகத்துக்கு புதிய கட்டடம் திறப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கோமரங்கடவெல பிரதேச செயலகத்துக்கான புதிய இரண்டு மாடிக்கட்டடத்தை  உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஐpர அபேவர்தன இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

'நல்லாட்சியின் அரசாங்க சேவை மக்களுக்காகவே' எனும் தொனிப்பொருளில் 276 இலட்சம் ரூபாய் செலவில் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இங்கு அமைச்சர் உரையாற்றுகையில், 'பொதுமக்களுக்கு சேவையை சிறந்த முறையில் வழங்க வேண்டும். அரச அதிகாரிகள் வேறு கட்சிகளாக இருந்தாலும், கடமை என்று வரும்போது, மக்களுக்குரிய சேவையை ஆற்றுபவர்களாக இருக்க வேண்டும்' என்றார்.

'மேலும், இலங்கையின் தேசியகீதமானது முன்னர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டது.  இருப்பினும், சில காலம் சிங்கள மொழியில் மாத்திரமே தேசியகீதம் இசைக்கப்பட்டது. ஆனால், இம்முறை நல்லாட்சி அரசாங்கமானது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போது, இரு மொழிகளிலும் தேசியகீதத்தை ஒலிக்க வேண்டுமென்ற முயற்சியை எடுத்தது. அதில் வெற்றியும் கண்டது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .