2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கையொப்பமிட்டவர் கைது

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு தொகையை செலுத்த தவறியமையினால் அதற்கு பிணையாளியாக நீதிமன்றில்  இருந்த குறித்த நபரின் சகோதரரான 30 வயது மதிக்கத்தக்க நபரை நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நபர் பல மாதங்களாக தாபரிப்பு தொகையை செலுத்த தவறியுள்ளார். அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டும் அவர் நீதிமன்றில் ஆஜராகமையினாலேயே அவருக்கு பிணைக்கு கையப்பமிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் மேற் கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின்போது, தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழும் நபர் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றுள்ள விடயம் தெரியவந்துள்ளதோடு பிணைக்கு கையொப்பமிட்ட நபரை நாளை புதன்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .