2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கிழக்குக்கு பதில் முதலமைச்சர் நியமனம்

Thipaan   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் இன்றுச் செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு நிதியுதவிகளை திரட்டிக்கொள்வதற்காக முதலமைச்சர் அஹமட் நஸீர், ஈரானுக்கு நேற்றுத் திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையிலேயே பதில் முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் 10 நாள் விஜயத்தை மேற்கொண்டே ஈரானுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--