2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

சுகவீன விடுமுறை போராட்டம் நாளை

Editorial   / 2020 மார்ச் 09 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

கிழக்கு மாகாண சுகாதார பணிமனைக்கு உட்பட்ட திருகோணமலை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், சுகவீன விடுமுறைப் போராட்டத்தை, நாளை செவ்வாய்க்கிழமை (10) முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளைக் காலை 7.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த சுகவீனப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென, திருகோணமலை மாவட்டப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்துக்குள் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இடமாற்றக் கொள்கைக்கு எதிரான இடம்மாற்றங்கள் இடம்பெறுவதைத் தடைசெய்யக்கோரியே இந்த சுகவீனப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையில் உள்ள சுமார் 51 பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சுகவீனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .