2021 மே 12, புதன்கிழமை

சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடியவர் விளக்கமறியலில்

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்து வந்த  ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.     

குறித்த நபர் சட்டவிரோதமாக அக்போபுர  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்லூற்று,வட்டுக்கச்சி ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் மான்,மறை மற்றும் பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை(22)கைதுசெய்துள்ளனர்.                


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .