2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சம்பூர் அனல் மின் நிலைய விவகாரம்; இந்திய அரசாங்கம் கரிசனை காட்ட வேண்டும்

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் இவ்வேளையில், இந்திய அரசாங்கத்தை இவ்விடயத்தில்  கரிசனை காட்டுமாறு வலியுறுத்தி தோப்பூர் அல்லைநகர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மூதூர் பசுமைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும்போது, 'சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையமோ அல்லது எரிவாயு மூலம் செயற்படும் மின்சார நிலையமோ அமைக்கப்படுமாக இருந்தால், எமது ஜீவனோபாய தொழில்களான விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்றன பாதிப்புக்குள்ளாகும். இதற்கு முக்கிய காரணம் அனல் மின்சார நிலையத்திலிருந்து வெளியாகும் நச்சுப்புi மற்றும் வெப்பம் அதிகரித்தல் என்பன முக்கிய காரணமாகும்' எனத் தெரிவித்தனர்.

'அத்தோடு, முக்கிய அமைச்சர் ஒருவர் அனல் மின்சார நிலையத்தின் வேலைகள் நடைபெறாது என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தும் தொடர்ந்தும் சம்பூர் அனல் மின்சா நிலையத்திற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, இது விடயத்தில் இந்திய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அனல் மின்சார நிலைய வேலைகளை இடைநிறுத்த வேண்டும்' பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, 'சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால் சம்பூரை அண்டிய பகுதியில் உள்ள மக்களின் ஜீவனோபாய தொழில் பாதிப்படையும். அத்தோடு நோய்களும் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்தியா அரசாங்கம் இது விடயத்தில் கரிசனை செலுத்தி சம்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ள அனல்மின்சார நிலையத்தை தடை செய்ய வேண்டும்' எனத்; தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .