2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சம்பூரில் 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகளை விடுவித்து, அவை வெள்ளிக்கிழமை(25)  பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் மொத்தமாக 546 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளன' என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'இதன்போது, சம்பூர் மகா வித்தியாலயம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்படும்.

இக் காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவம் வௌ காலை 10 மணிக்கு சம்பூரில் நடைபெறவுள்ளது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X