2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சாணர் பாசறை ஒத்தி வைப்பு

Sudharshini   / 2016 மே 21 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சசிகுமார், பதுர்தீன் சியானா

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினால் நடத்தப்படவிருந்த சாணர் பாசறையை, பின்போடுமாறு பிரதம சாரணர் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை சர்வோதயம் நிலையத்தில் இந்த சாணர் பாசறை நடைபெறவிருந்தது. தற்போது நாட்டில் நிலவும்  நிலையை கருத்திற்கொண்டு இந்த பாசறை பிற்போடப்பட்டுள்ளது.

இம்முகாமில் நுவரெலியா, கோகாலை, கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மாவட்டங்களிலிருந்து பெருமளவான சாணர்கள் பங்குக்கொள்ளவிருந்தனர்.

இந்த சாணர் பாசறைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைப்பின் ஆணையர் இ.சத்தியராஜ்  அறிவித்தல் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .