2021 மே 08, சனிக்கிழமை

சேமலாப நிதியைப் பெறுவதற்கு விசேட பூஜை

Gavitha   / 2015 நவம்பர் 26 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

திவிநெகும உத்தியோகத்தர்களின் சேமலாப நிதியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, திவிநெகும ஒருங்கிணைக்கப்பட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதிஸ்ரான பூஜை நிகழ்வில்,  பாதிக்கப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசெம்பர் 03ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில், கண்டி கெட்டம்பே தியகபனாதொட்ட ஸ்ரீரக்ஹங்க விகாரையில்; நடைபெறும் இப்பூஜை நிகழ்வில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அமைப்பின் தலைவர் சமத் துடாவஹேவா,  செயலாளர் எஸ்.டி.எஸ்.பிரியதர்சினி உள்ளிட்டவர்களால் கையொப்பமிடப்பட்டு சகல பிரதேச செயலக திவிநெகும பிரிவுக்கும்  அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சேவைக்காலத்துடன்  ஓய்வூதிய முறைக்கு பங்களித்த அனைத்து உத்தியோகத்தர்களும் திவிநெகும திணைக்களத்தினுள் உள்வாங்கும்போது, மிகவும் பாரதூரமான அசாதாரண சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தே இப்பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்கின்றவர்கள் பொறுமையுடனும் ஒழுக்கமுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X