2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்கத்தினர் - கிழக்கு முதல்வர் சந்திப்பு

Thipaan   / 2016 ஜூலை 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். முபாரக், தீசான் அஹமட்

தென்னிந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த, சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்கத்தின் தலைவர் சி.முத்துசாமி தலைமையிலான மேலதிகாரிகள் குழுவினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை முதலமைச்சர் அலுவலகத்தில், இன்று (19) காலை சந்தித்தனர்.

மேற்படி சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் கல்வியை இடைநடுவில் விட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க கிழக்கில் கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் சம்மந்தமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது, விரைவில் கிழக்கு மாகாணத்தில் பாரிய கைத்தொழிற்பேட்டை ஒன்றினை உருவாக்கும் ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்போம் என்று, தமிழ் நாடு சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்க அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இச்சந்திப்பில், தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த சீ.பாபு, சீ.கே.மோகன், எஸ்.ரவிச்சந்திரன், கே.மாரியப்பன், வீ.எஸ்.மணிமாறன், எஸ்.கணேஸ், எஸ்.அசோக், வீ.நடராஜன் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பை இலங்கை - இந்திய தொடர்பாளர் மனவை அசோகன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .