2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்றவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், பதுர்தீன் சியானா                 

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற வளர்ப்புத் தந்தையை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாசினி சித்திரவேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை  உத்தரவிட்டார்.                        

ரங்கிருல், உல்பத்த, கோமரங்கடவெல பிரதேசத்தைச் சேர்ந்த 37வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                      

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் குறித்த பெண்ணின் கணவரை  கைதுசெய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.                                 

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--