2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தல் கடமை கொடுப்பனவு வழங்கப்படவில்லை’

ஏ.எம்.ஏ.பரீத்   / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களாகியும் இன்னும்  கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகததர்களுக்கு  அதற்கான கொடுப்பனவுகள்  வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் 2019.11.16 திகதியன்று நடைபெற்றது. ஆனால், இத் தேர்தல் கடமைக்கான கொடுப்பனவு, கிராம உத்தியோகதத்தர்களுக்கு இதுவரை  வழங்கப்படவில்லையென, ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கிண்ணியா கிளைத் தலைவர் எஸ்.எம்.எம்.ஐயூப் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இக்கொடுப்பனவை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்  கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .