2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ஜம்போறி 08ஆம் திகதி தொடக்கம் ஆரம்பம்

Sudharshini   / 2016 மே 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன்

திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் 4ஆவது சாரணர் ஜம்போறி எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை, சர்வோதயம் மாவட்ட நிலையத்தில் நடைபெற உள்ளது.

இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை நடைபெறவிருந்த ஜம்போறி, நாட்டில் எற்பட்ட இயற்கை அனர்த்தம்; காரணமாக பிற்போடப்பட்டது.

திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா, கேகாலை, மன்னார், கொழும்பு  மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 3,000 க்கும் மேற்பட்ட சாரணர்கள் பங்குகொள்ள உள்ளனர்.  ஆரம்பநிகழ்வில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசிர் அஹமட்; கலந்துகொண்டு தொடக்கி வைக்க உள்ளார்.

திருக்கோணேஸ்வரம், கன்னியா, சேருவில ஆகிய உப-முகாம்களில் சாரணர்கள் தங்கி இருந்து தமது செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கும் வெளி மாவட்ட சாரணர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இம்முகாமிற்கான உப அனுசரணையை இலங்கை இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் வழங்கி வருகின்றனர்.  திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவர் வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆணையாளர் க.உமாபதிசிவத்தின் வழிகாட்டலில்  உதவி மாவட்ட ஆணையார் இ.சத்தியராஜன் இதன் அமைப்பு ஆணையாளராக செயற்படுகின்றார்.

மாவட்டத்தில் பொது மக்கள் மத்தியில்  சாரணீயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகமாக 10ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு வீதி நடை ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .