2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

தண்டவாளத்தில் உறங்கியவர் பலி

Editorial   / 2020 ஜனவரி 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயில் மோதி, திருகோணமலை - கொட்பே பகுதியைச் சேர்ந்த உபுல் சமிந்த (39 வயது) என்பவர், நேற்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிய போது, கொழும்பிலிருந்து பொருள்களை ஏற்றிவந்த ரயில் மோதியமையால், இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--