2021 ஜனவரி 27, புதன்கிழமை

திருமலையில் ஊடகவியலாளர்களைத் தெளிவூட்டும் நிகழ்வு

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவிடன் “உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்” எனும் தொனிப்பொருளிலான ஊடகவியலாளர்களைத் தெளிவூட்டும் நிகழ்ச்சி, இன்று (22), திருகோணமலையில் நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையுடன் இணைந்த திறன்விருத்தி தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட, நடைமுறையிலுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக, திருகோணமலை ஊடகவியலாருக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு, சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதில் ஊடகவியலாளரின் பங்கு பற்றியும் கலந்துரையாடப்பட்டது .

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, திருகோணமலையின் முக்கிய இடங்கள் நிகழ்வுகள் பற்றி, தங்களின் அச்சு ஊடகங்கங்கள், இணையத்தளங்கள், சமூக ஊடகங்களில் தாம் கட்டுரைகள் ஆக்கங்களை, காணொளிகளை வெளியிட்டு, சுற்றுலா பயணிகளை கவர உள்ளதாக ஊடகவியலாளார்கள் இதன் போது​ தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .