2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தாபரிப்பு பணம் செலுத்தாதவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

திருகோணமலை பிரதேசத்தில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை  தாபரிப்பு செலுத்தாத ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மிஹககே இன்று வியாழக்கிழமை (24) ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

திருகோணமலை சோனகவாடி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                        

குறித்த நபர் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில், சுமார் பதினேழு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை புதன்கிழமை (23) கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X