Thipaan / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூருக்கு விஜயம் செய்த போது, திருகோணமலை மாவட்டத்தைத் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்காக சபேனா ஜெரோன் என்ற சிங்கப்பூரின் திட்டமிடல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மூதூர் தள வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் தங்குமிட விடுதியை ஞாயிற்றுக்கிழமை (31) திறந்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
திருகோணமலை மாவட்டத்தை பெரிய வியாபார முதலீட்டு வலயமாக மாற்றுவதற்கான சகல ஏற்பாடுகளையும் இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், திருகோணமலை மாவட்டத்தில் பாரிய தொழிற்பேட்டைகள் அமையவிருப்பதோடு மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகள் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. இதனால் திருகோணமலை நகர் அதனை அண்டியிருக்கின்ற பிரதேசங்கள் நிச்சயமாக வளர்ச்சியடையும்.
எமது நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் கடன் சுமைகளுக்கும் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றது. சரியான திட்டமிடலோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக் ,ஏ.ஆர்.எம்.மனசூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர், திரு.நாகேஸ்வரன் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


3 hours ago
6 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
16 Nov 2025