2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தீ வைக்கப்படும் வயல் நிலங்கள்

தீஷான் அஹமட்   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தோப்பூரில் தற்போது சிறுபோக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், அறுவடை இடம்பெற்ற வயல் நிலங்களை, உரிமையாளர் தீ வைத்து எரிப்பதால், கால்நடைகள் உணவின்றிக் கஷ்டப்படுவதாக, கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடும் வரட்சி காரணமாக தோப்பூர் பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான மாடுகளும் ஆடுகளும் நீர் இன்றியும், மேய்ச்சல் இன்றியும் அவதியுற்று வருகின்றன. இந்நிலையில்,  நெல் அறுவடை இடம்பெற்றமையால் கால்நடைகளுக்கு வைக்கோல் மூலம் உணவு கிடைக்குமென, கால்நடை வளர்ப்பாளர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால், தற்போது வேளாண்மை அறுவடை செய்தவர்களில் பெரும்பாலானோர் வைக்கோலைத் தீயிட்டு எரிப்பதால், கால்நடைகளுக்கு உணவின்றிப் போவதாக, கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கால்நடைகளின் நலன் கருதி, வயல் நிலங்களுக்குத் தீ வைக்காது, கால்நடைகளின் உணவுகளுக்காக வைக்கோலை விட்டு வைக்குமாறு, தோப்பூர் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X