2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நூறு குடும்பங்களுக்கு உதவி

தீஷான் அஹமட்   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.எல்.நௌபர்

திருகோணமலை, தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 12 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த பெண் தலைமை தாங்கும் 100 குடும்பங்களுக்கு, இன்று (13) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

“குளோபல் எஹ்சான் ஸ்ரீலங்கா றிலீப்” அமைப்பு, தோப்பூர் உப பிரதேச செயலகத்தோடு இணைந்து, பயனாளிகளைத் தெரிவு செய்து 5,000 ரூபாய் பெறுமதியான இந்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு பாரபட்சமின்றி, இந்தப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில், தோப்பூர் உப பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், குளோபல் எஹ்சான் ஸ்ரீலங்கா றிலீப் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--