2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம்

Thipaan   / 2016 ஜூலை 23 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றின் நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம், எதிர்வரும் திங்கட்கிழமை(25) காலை 9.00 மணிக்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளதாக, திருகோணமலை மாவட்ட பரீட்சை இணைப்பாளர் எஸ்.விஜேயந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்தத் தெரிவிக்கையில்,

பரீட்சை அலுவலர்களுக்காக, ஏற்கெனவே பரீட்சைத் திணைக்களத்தால் நியமனக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இக்கூட்டத்துக்கு வரும் போது அக்கடிதத்தைக் கொண்டு வருமாறும், கூட்டத்துக்கு வருகை தராதவிடுத்து, தங்களது பணிக்கு வேறொருவர் நியமிக்கப்படுவார்.

அத்துடன், கூட்டத்துக்கு சமூகம் தர முடியாதவர்கள் முன்கூட்டியே உரிய காரணத்தைக் குறிப்பிட்டு தங்களது வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தெரியபடுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .