2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

பண மோசடி; தந்தை, மகன் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை மோசடிசெய்த குற்றச்சாட்டில், தந்தையையும் மகனொருவரையும் நேற்று (14) கைது செய்துள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய தந்தையும் 38 வயதுடைய மகனுமே, இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள்  இருவரும் இணைந்து மாத்தரை பகுதியைச் சேர்ந்த நபரொருவரிடம் கடனாக நான்கரை இலட்சம் ரூபாயைப் பெற்று திரும்பிச் செலுத்தாது ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், பணத்தை வழங்கிய நபர், பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--