Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 21, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 03 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
இலங்கையில் ஏற்பட்ட சுனாமி போன்ற பெரும் அழிவுக்கு அடுத்த அனர்த்தமாக இதனை நாம் பார்க்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு, நேற்று (02) காலை 9.30 மணிக்கு சபை தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் கூடியது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று, அனர்த்தத்தில் காலி, களுத்துறை, கேகலை, இரத்னபுரி போன்ற மாவட்டங்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக சில கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்தமையே எனலாம்.
இந்த அனர்த்ததின் போது சுமாராக 203 உயிரிழப்புகளும் 100க்கும் மேற்பட்டோர் காணாமலும் போயுள்ளதுடன் 107,486 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 65,000 பேர் மக்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பதியப்பட்டுள்ளன.
குறித்த அனர்த்தத்தில் அரசாங்கத்தின் இரண்டு வானூர்திகள் உட்பட அரச சொத்துகள் சிலவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட சுனாமி போன்ற பெரும் அழிவுக்கு அடுத்த அனர்த்தமாக இதனை நாம் பார்க்க வேண்டும்.
எனவே, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மக்கள் என்ற உணர்வுடன் சாதி பேதங்கள் பார்க்காமல் மக்களுக்கு எதனை செய்ய முடியுமோ அதனைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதுவே இந்த மாகாண சபையின் அவசர ஒன்று கூடல் என்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது.
எனவே, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பாரிய தொகை ஒன்றினை நாம் அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது கட்டாயமாகும் என்று நான் கேட்டுக்கொள்வதுடன், நாம் முதலில் ஒற்றுமைப்பட வேண்டும் நம் ஒற்றுமைதான் இப்படியான அனர்த்தம் போன்ற பாதிப்புகளில் உள்ளாகும் மக்களையும் மாவட்டங்களையும் நாமும் பார்க்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
20 Apr 2021
20 Apr 2021