2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

புத்தர் சிலை சேதம்; ஒருவர் கைது

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

திருக்கோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதி கோணேஸ்வரா கோயில் சந்தியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  தம்பலகாமம் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகவும்  தெரிவித்தனர்.

இன்று (10) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், தம்பலகாமம், பொற்கேணி பகுதியைச் சேர்ந்த 43 வயதான  நடராசா தாஷன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார். பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு இருந்தவர் ஆவார் என விசாரணைகளிலிருந்து ​தெரியவந்துள்ளது.

உளநலம் பாதிக்கப்பட்ட அவர், திருகோணமலை பொது வைத்தியசாலை "உளநலப் பிரிவில்" சிகிச்சைப் பெற்று வருகின்றவர்  எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை, கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X