2020 நவம்பர் 25, புதன்கிழமை

பன்றி இறைச்சி வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

    -எப்.முபாரக்                  

சட்டவிரோதமாக இரண்டு கிலோ பன்றி இறைச்சியை வைத்திருந்த 60 வயதுடைய ஒருவருக்கு 27 ஆயிரம் ரூபாய் அபராதத்தை குச்சவெளி நீதிமன்ற நீதிவான் ஹயான்  மீ ஹககே, நேற்று வியாழக்கிழமை விதித்துள்ளார்.

மேலும், அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைத்தண்டனை அனுப்பவிக்க நேரிடுமெனவும் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை, புல்மோட்டைப் பகுதியிலுள்ள அவரது வீட்டில் இரண்டு கிலோ பன்றி இறைச்சியை வைத்திருந்த மேற்படி நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--