2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

பன்றி வேட்டையாடிய இருவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, சேருவிலப் பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்ட இருவரை, நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர, கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 31 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீண்டகாலமாக சேருவில காட்டுப்பகுதியில் பன்றி மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் போது, கையில் கூரான கத்திகள் வைத்திருந்ததாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததோடு, சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து துப்பாக்கிகளும் உள்ளனவா போன்ற விசாரணைகளை முற்னெடுப்பதாகவும் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .