2021 மே 06, வியாழக்கிழமை

பித்தளை, இரும்புகளைத் திருடியோருக்கு கட்டாயச் சிறை

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்          

எண்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பித்தளை மற்றும் இரும்புகளைத் திருடிய இருவருக்கு,  தலா மூன்று மாத கால கட்டாயச் சிறைதண்டனை விதித்து, கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, வெள்ளிக்கிழமை (27) தீர்ப்பளித்தார்.

கந்தளாய் அக்போபுரவைச் சேர்ந்த சம்பத் அருண சாந்த வயது (34), கே.நுவன் சிறினாத் வயது (25) ஆகியோருக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.      

கந்தளாய் சீனிபுர பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு  பித்தளை மற்றும் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில், இவ்விருவருக்கும் எதிராக கந்தளாய் பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.      

குறித்த வழக்கு கந்தளாய் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், இருவரையும்  குற்றவாளிகளாக இனங்கண்ட நீதவான் மேற்கண்ட உத்தரவு பிறப்பித்தார்.                          


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .