2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய 11 பேருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான்ஓயா காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில்  கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான்  மீ கஹகே தலா இரண்டு இலட்சம் ரூபாய் படி தண்டம் விதித்துள்ளார்.

தண்டம் செலுத்தாத பட்சத்தில் 6 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுப்பவிக்க நேரிடுமென நீதவான்  உத்தரவிட்டார்.

கடந்த 24ஆம் திகதி யான்ஓயா காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தபோது, இவர்கள்  கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு  
நேற்று வியாழக்கிழமை இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

புல்மோட்டை, வாரியபொல, மினுவங்கொட, கொக்கிளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X