2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

முதியோருக்கு அடையாள அட்டை

பொன் ஆனந்தம்   / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதியோருக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை,  திருகோணமலை தம்பலகமம் பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து, இன்றைய தினம் (07) பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியது.

இதில் அதிகளவிலான முதியோர்கள் கலந்துகொண்டு, தமக்கான சிரேஷ்ட பிரஜைக்கான அடையாள அட்டையைப் பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைளை எடுத்தனர்.

இதனைப்பெறுவதன் மூலம் அரச சேவைகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைவதுடன், தாமதங்களையும் தவிற்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாட்டை, பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .