Gavitha / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குள காட்டுபகுதியில், காட்டு மரங்களை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க இருவரை, ஞாயிற்றுக்கிழமை இரவு (18), கந்தளாய் குள காட்டுப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக, கந்தளாய் தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் காட்டு மரங்களை அறுப்பதாக கந்தளாய் தலைமை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பின் போதே, மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 20 காட்டு நாவல் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
44 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
26 Oct 2025