2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மாணவன் மீது தாக்குதல்

Niroshini   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்களப் பாடசாலையொன்றைச் சேர்ந்த 12ஆம் ஆண்டு மாணவனுக்கு, 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

12ஆம் ஆண்டு மாணவனுக்கு 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு இன்று செவ்வாய்க்கிழமை  தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தமலாவ பகுதியைச் சேர்ந்த அகில மனோ டில்சான் சிரியானந்த (வயது 17) எனும் மாணவனே, கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .