2021 மே 18, செவ்வாய்க்கிழமை

முதிரைக்குற்றிகளை கொண்டுசென்ற மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

அனுமதிப்பத்திரமின்றி 13 முதிரைமரக் குற்றிகளை  கொண்டுசென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 03 பேரை இம்மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான்; ருவன் திஸாநாயக்க திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.                           

சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரவிலிருந்து சமகிபுரவுக்கு முதிரைமரக் குற்றிகளை உழவு இயந்திரத்தில்; கொண்டுசென்ற வேளையில், கடமையில் நின்ற பொலிஸார் திங்கட்கிழமை அதிகாலை உழவு இயந்திரத்துடன் மரக்குற்றிகளை கைப்பற்றியதுடன், இச்சந்தேக நபர்களையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .