2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைக்கு உதவி

தீஷான் அஹமட்   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரிக்கு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் போட்டோ கொப்பி இயந்திரமொன்றை, கல்லூரி அதிபர் எஸ்.ஏ.றஹீமிடம் கையளித்தார்.

குறித்த கல்லூரி கடந்த கால உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு, பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் காணப்படுவதாக, அல்ஹம்றா மத்திய கல்லூரி நிர்வாகம், நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, இந்த போட்டோகொப்பி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் சிறிகாந், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.றிபாஸ், ஜெஸீலா குஸைன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--