Suganthini Ratnam / 2016 மார்ச் 06 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
யானைக்கால் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையை திருகோணமலை மாவட்டத்தில் றுகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஒட்டுண்ணியல்த்துறை ஆய்வுக்கிளை முன்னெடுத்துள்ளது.
முதற்கட்டமாக சனிக்கிழமை (05) கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மகளிர்; மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் நான்கு, ஐந்தில் கல்வி கற்கும் 320 மாணவர்களின் சிறுநீர் பெறப்பட்டுள்ளது.
றுகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஒட்டுண்ணியல்த்துறை விரிவுரையாளர் ஜானக்க ரூபன் இது தொடர்பில் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த மருத்துவப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
யானைக்கால் நோய் தொற்று இல்லை என்பது தொடர்பிலோ, குறைவாக உள்ளதா அல்லது தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் முன்கூட்டி அறிவதே இந்த மருத்துவப் பரிசோதனையின் நோக்கமாகும்.
காலி மாவட்டத்திலும்; முதற்தடவையாக இந்த மருத்துப் பரிசோதனையை முன்னெடுத்து அங்கு யானைக்கால் நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதை நிரூபித்துள்ளோம்' என்றார்.
16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago