2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வயலில் விளையாடியமைக்காக மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, ரொட்டவெவப் பகுதியில் 13 வயதுடைய மாணவன் ஒருவன் ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அம்மாணவன் மகாதிவுள்வௌ பிரதேச வைத்தியசாலையில் சனிக்கிழமை (05) மாலை அனுமதிக்கப்பட்டதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொட்டவெவப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கின்ற இந்த மாணவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது உறவினரின் வயலுக்குச் சென்று வேளாண்மை வேலையில் ஈடுட்டுள்ளார்.
இதன்போது, அருகிலுள்ள குறித்த ஆசிரியரின் வயலுக்கும் சென்று தனது நண்பர்களுடன் இந்த மாணவன் விளையாடியுள்ளார். இதனை அடுத்து இந்த மாணவiனை சனிக்கிழமை குறித்த ஆசிரியர்  அழைத்துத் தாக்கியதாக மொறவெவப் பொலிஸ் நிலையத்தில் மாணவனின் தந்தை செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .